கொழும்பு நோக்கி பயணித்த கனரக வாகனம் விபத்து

February 9, 2018 12:09 PM

4 0

கொழும்பு நோக்கி பயணித்த கனரக வாகனம் விபத்து

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இன்று காலை கனரக வாகனமொன்று விதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து, பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரிக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் கனரக வாகனத்தின் சாரதியும், உதவியாளரும் சிறு சிறு காயங்களுடன் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்கரப்பத்தனையிலிருந்து தேயிலை தூள் பக்கற்றுக்களை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கி சென்ற வாகனமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

வாகன சாரதியின் கவனயீனம் காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...