குழந்தைகளின் உயிரை பறித்த மர்மமான வைரஸ்

May 14, 2018 1:20 PM

6 0

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் உள்ள சிறுவர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 குழந்தைகள் அடையாளம் காணப்படாத வைரஸ் நோய் தாக்கத்திற்கு உட்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களில் இந்த மரணங்கள் நடந்துள்ளதுடன் இந்த வைரஸ் காரணமாக சுகவீனமடைந்த இரண்டு குழந்தைகள் வைத்தியசாலையில் சிகிக்சைப்பெற்று வருகின்றன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜயம்பதி சேனாநாயக்க, கடந்த சில தினங்களில் 5 குழந்தைகள் உயிரிழந்தன. பக்டீரியா இதற்கு காரணமாக இருக்கலாம் என முதலில் நாங்கள் நினைத்தோம்.

எனினும் வைரஸ் இதற்கு காரணம் என பின்னர் கண்டறிந்தோம். அந்த வைரஸ் என்ன என்பதை எம்மால் கண்டுபிடிக்க முடியாதுள்ளது. இது சம்பந்தமாக விசேட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம்.

குழந்தையின் இரத்த மாதிரிகள் பரிசோதனைகளுக்காக கொழும்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இன்னும் சில குழந்தைகள் சுகவீனமான நிலையில் உள்ளன. நாங்கள் இது சம்பந்தமான பரிசோதனைகளை நடத்தி வருகிறோம். இதனைதான் தற்போது கூற முடியும் எனவும் ஜயம்பதி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...