கிழக்கு ஆளுநர் – உயர்ஸ்தானிகர் சந்திப்பு..!!

November 12, 2017 10:51 AM

11 0

தென்னாப்பிரிக்கா உயர்ஸ்தானிகர் மாக்ஸ் அம்மையாருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவுக்குமிடையிலான சந்திப்பு, ஆளுநர் அலுவலகத்தில் இன்று (12) பிற்பகல் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது, கிழக்கு மாகாணத்தில் யுத்தத்துக்குப் பின்னரான அபிவிருத்தி, தேசிய நல்லிணக்க விவகாரங்கள், கிழக்கு மாகாணத்தில் தென்னாப்பிரிக்காவின் முதலீட்டு முயற்சிகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

தேசிய நல்லிணக்கம் தொடர்பான தென்னாப்பிரிக்காவின் அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து, இந்நாட்டின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பரவலாக்கல் முயற்சிகளை கட்டியெழுப்புவதற்கு தென்னாப்பிரிக்கா தன்னாலான முழு உதவிகளை வழங்குமென, உயர்ஸ்தானிகர் மாக்ஸ் அம்மையார் இதன்போது தெரிவித்தார்.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தென்னாப்பிரிக்காவின் முயற்சிகளை வரவேற்ற கிழக்கு மாகாண ஆளுநர், பல்லின மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தின் எதிர்காலம் இணங்களுக்கிடையிலான நல்லுறவிலேயே தங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...