கிளிநொச்சியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு..!!

September 13, 2018 2:42 PM

7 0

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான நட்டஈடுகள் இன்று (13) கிளிநொச்சியில் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணி அளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

நாட்டில் நிலவிய யுத்தத்தினால் சேதமாக்கட்டப்பட்ட ஆலயங்கள் மற்றும் உறவுகளை இழந்தோர், அங்கங்களை இழந்தோர் மற்றும் சொத்துக்களை இழந்தோருக்கான நட்டஈட்டு காசோலைகள் ஒரு தொகுதியினருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 252 பேருக்கு 21,465,990 ரூபா மொத்தமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், புனர்வாழ்வு அதிகார சபை தலைவர் அன்னலிங்கம், அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...