கிளிநொச்சியில் பெய்த கடும் மழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன..!! (படங்கள்)

November 8, 2018 8:45 AM

15 0

கிளிநொச்சியில் பெய்த கடும் மழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன..!! (படங்கள்)

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் வான்பாய்ந்து வருகின்றமையால் கிளிநாச்சி ஆனந்தபுரம் கிழக்கும் மற்றும் இரத்தினபுரம் கிராமங்களின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் வாழ்கின்ற பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மக்களின் வீடுகளுக்கு வெள்ளம் சென்றமையினால் நேற்றிரவு(07) முதல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சீரான வடிகாலமைப்பு வசதிகள் இன்மையால் வெள்ள நீர் வழிந்தோட முடியாத நிலையில் இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களை செர்ந்த 57 பேருக்கான உடனடி உணவுகள் கிளிநொச்சியில் உள்ள படையினர் வழங்கியுள்ளனர. அத்தோடு 200 குடும்பங்களுக்கான உணவு மற்றும் குடிநீர், பிஸ்கட் போன்றவற்றை கரைச்சி பிரதேச சபையின் கிளிநொச்சி நகர சுயேச்சைக் குழு உறுப்பினர் தா.ரஜினிகாந்த வழங்கியுள்ளார்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...