கிளிநொச்சியில் கல்விக்கான நிதியொதுக்கீட்டின் கீழ் 41 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்..!!

September 13, 2018 5:57 PM

7 0

கிளிநொச்சி மாவட்டத்தில் மாகாண சபை உறுப்பினர்களின் கல்விக்கான நிதியொதுக்கீட்டின் கீழ் 41 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள் பல்வேறு நிதியுதவியுடன் மேறகொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் மாகாண சபை உறுப்பினர்களின் நிதியொதுக்கீடுகளில் இவ்வாண்டு 41 திட்டங்கள் 5.305 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதாவது வடமாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜாவின் 2.490 மில்லியன் ரூபாவும் ப.அரியரத்தினதின் 1.370 மில்லியனும் சு.பசுபதிப்பிள்ளையின் 0.730 மில்லியன் ரூபாவும் வை.தவநாதனின் 0.550 மில்லியனும் அ.புவனேஸ்வரனின் 0.015 மில்லியனும் இ.இராஜசேகரம் அவர்களின் ஒதுக்கீட்டிலும் அஸ்மின் ஒதுக்கீட்டிலும் தலா 0.075 மில்லியனும் என்று 41 திட்டங்கள் 5.305 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...