கிளிநொச்சியில் அனைத்து பிரதேச சபைகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம்!

February 10, 2018 4:46 PM

1 0

உள்ளூராட்சி சபைத்தேர்தலில் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில். கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 21 வட்டாரங்களில் 16 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், 05 வட்டாரங்களில் சுயேட்சைக் குழுவும் வெற்றிப்பெற்றுள்ளது.

பச்சிலைப்பள்ளியில் எட்டு வட்டாரங்களில் 6 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், 2 வட்டாரங்களில், சுயேட்சைக் குழுவும் வெற்றிப்பெற்றுள்ளது.

பூநகரி பிரதேச சபையில் 11 வட்டாரங்களில் அனைத்து வட்டாரங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிப் பெற்றுள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...