கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சித் தேர்தல் வாக்குப்பெட்டிகள் விநியோகம்…!! (படங்கள்)

February 9, 2018 8:52 AM

6 0

கிளிநொச்சி மாவட்டத்தில், உள்ளுராட்சித் தேர்தல் 2018 ஆண்டுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்காக வாக்குப்பெட்டிகள் விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப்பெட்டி விநியோக நடவடிக்கைகள் மத்தி நிலையமான கிளிநொச்சி பழைய மாவட்டசெயலகத்தில் இன்றைய தினம் காலை 7 மணிமுதல் ஆரம்பமாக மும்முரமாக நடைபெறுகின்றன.

மாவட்ட தேர்தல் தெறிவத்தாச்சியாளர் இதன்போது கருத்துதெரிவித்தார்.கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் 40 வட்டாரங்களிலுமிருந்து 86734 பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் எனவும் 638 பேர் வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள் அதில் 66 மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையம் கிளிநொச்சி மாவட்டசெயலகம் இம்முறை தேர்தல் பணிகளுக்கென வெளிமாவட்டங்களிலிருந்தும் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும் வருகைதந்த 1500 உத்தியோகத்தர்களும் 300 பொலிஸாரும் ஈடுபடவுள்ளனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...