கிளிநொச்சி தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் 16வது திருக்குறள் மாநாடு இன்று நிறைவுபெற்றது..!! (படங்கள்)

July 9, 2018 8:28 AM

10 0

கிளிநொச்சி தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் 16வது திருக்குறள் மாநாடு இன்று நிறைவுபெற்றது..!! (படங்கள்)

கிளிநொச்சி தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் 16வது திருக்குறள் மாநாடு இன்று நிறைவுபெற்றது. குறித்த மாநாடு நேற்று ஆரம்பமாகியது. இரண்டாம் நாளான இன்று குறித்த மாநாடு நிறைவுக்கு வந்தது, கிளிநொச்சி பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் குறித்த மாநாடு இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 16வது மாநாடு இது என்பது குறிப்பிடதக்கது,

இரண்டாம் நாளான இன்றய மாநாடு கிளிநொச்சி தமிழ் சங்க தலைவர் எஸ்.இறைபிள்ளை அவர்களின் தலைமையில் மாலை 2 மணியளவில் ஆரம்மானது. குறித்த நிகழ்வில் பா ம உறுப்பினர் சி.சிறிதரன், மாவை சேனாதிராஜா, வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கிளிநொச்சியில் தமிழிற்காக உழைத்தவர்கள் மற்றும் தமிழ் முறைப்படி திருமணம் செய்தவர்கள், சிறந்த சேவகர்கள் உள்ளிட்டவர்களளும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும். அதன்போது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...