கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு..!! (படங்கள்)

October 13, 2017 11:44 AM

4 0

கிளிநொச்சி கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையம் இன்று கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

மத்திய கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அவர்களின் பணிப்பாளர் நாயகம் ஆரியதாச அவர்களின் தலைமையில் இடம்பெற்ற, மத்திய கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் சுமார் 32 மில்லியன் நிதியுதவியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட குறித்த கட்டடத்தினை பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ரி.ஹரிசன் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் ஆரியதாச, பணிப்பாளர் விலங்கு சுகாதார வைத்தியர் நிமால் ஜெயவீர, மேலதிக செயலாளர் வைத்தியர் நிகால் மற்றும் கால்நடை வைத்தியதிணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...