கூலிக்காரனை மிரட்டிய விஜயகலா மகேஸ்வரனின் மெய்பாதுகாவலருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு..!! (படங்கள்)

October 9, 2017 6:09 PM

5 0

இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் மெய்பாதுகாவலராக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகில் உள்ள தனது(மெய்பாதுகாவலர்) வீட்டில் மரம் வெட்டுவதற்கு கூலிக்கு ஒருவரை குறித்த மெய்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் அழைத்து சென்று வேலை வாங்கிய பின்னர் அதற்குரிய ஊதியத்தினை வழங்கவில்லை என கூறி பாதிக்கப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் அம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட கூலியாள் தனக்கு வழங்க வேண்டிய கூலிக்கு பதிலாக வீட்டில் தன்னால் வெட்டப்பட்ட மரத்தினை எடுத்து செல்லுமாறு அமைச்சரது மெய்பாதுகாவலர் வற்புறுத்தினார்.

அதற்கு நான்(கூலியாள்) அனுமதிபத்திரம் எடுக்கவேண்டும். இல்லையேல் பொலிஸார் கைது செய்வார்கள் என கூறினேன். இதற்கு கடுமையான தொனியில் தன்னை எச்சரித்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதற்கு பயந்தே இவ்முறைப்பாட்டை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இம்முறைப்பாடு தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் 27 வயதை உடைய தினேஸ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே குறித்த குற்றச்சாட்டுக்கு இலக்காகி உள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...