கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை!!

December 8, 2018 5:28 PM

34 0

அம்பாறை நகர எல்லையில் இருக்கின்ற நவகம்புர கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை வீடொன்றுக்குள் புகுந்த அந்த வீட்டை சேதப்படுத்தியுள்ளது.

வீட்டின் உரிமையாளர் வீட்டில் அறையொன்றில் உறங்கிக் கொண்டிருந்துள்ளதுடன், வீட்டின் ஜன்னலை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்த காட்டு யானை சேதம் விளைவித்துள்ளது.

இதனையடுத்து உரிமையாளர் அறை ஜன்னல் ஊடாக வீட்டிற்கு வௌியே ஓடிச் சென்று உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டிற்குள் இருந்த யானை வீட்டு சுவர்களையும் இடித்து சேதப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அருகில் இருந்த மற்றொரு வீட்டிற்கு சென்றுள்ள காட்டு யானை வீட்டு கதவு மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...