கையில் கட்டுகளுடன்பி ச்சை எடுத்த 10 வயது சிறுவன் !

November 12, 2017 1:35 AM

14 0

கையில் கட்டுகளுடன்பி ச்சை எடுத்த 10 வயது சிறுவன் !

தமிழகத்தில் மருத்துவ செலவுக்கு பணமில்லாததால், பிச்சை எடுத்த 10 வயது சிறுவனை போலீசார் மீட்டனர்.

மார்த்தாண்டம் சந்திப்பையொட்டி தனியார் மருத்துவமனை முன்பு 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கையில் கட்டுகளுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். இதுகுறித்து, நாகர்கோவில் சைல்டு ஹெல்ப் லைன் மற்றும் மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மார்த்தாண்டம் போலீசார் சிறுவனை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகளும் அங்கு சென்று சிறுவனிடம் விசாரித்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், சிறுவனுக்கு மருத்துவ செலவு மற்றும் கல்வி செலவைச் செய்வதாகவும், சிறுவனை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுரை கூறி தாயுடன் அனுப்பி வைத்தனர்.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...