கெப் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

February 5, 2018 11:02 AM

23 0

கெப் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

பதுளை - தெல்பத்தை பகுதியில் நேற்று இரவு கெப்ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி பாய்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதன்போது அதில் பயணம் செய்த இருவர் கடும்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெல்பத்தை பகுதியிலிருந்து பதுளை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த கெப்ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் தெல்பத்தை பகுதியை சேர்ந்த 43 வயதுடைய பிரேமசிறி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...