கோத்­தாவை கைது செய்தால் நாடு கொந்­த­ளிக்கும்..!!

January 13, 2018 6:08 AM

47 0

அர­சாங்கம் ஏதா­வ­தொரு அணுகு­மு­றை யைப் பாவித்து முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை கைது­செய்­வ­தற்கு எதிர்­பார்க்­கி­றது. எனினும் அவரைக் கைது­செய்தால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் உட்­பட நாட்­டி­லுள்ள கோத்தாவை சகல தரப்­பி­னரும் கிளர்ந்­தெ­ழு­வ­தற்கு தயா­ராக உள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரோஹித அபே­கு­ண­வர்­தன தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு பத்­த­ர­முல்லை நெலும் மாவத்­தை­யி­லுள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்­றது. அந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை கைது செய்­வதன் பின்­ன­ணியில் அவரின் குடும்ப உறுப்­பி­னர்கள் உள்­ள­தாக முத­ல­மைச்சர் ஒருவர் குறிப்­பிட்­டுள்ளார். ராஜ­பக் ஷ குடும்­பத்­தி­லுள்­ள­வர்கள் எவரும் அவ்­வா­றில்லை. அத­னால்தான் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை பாது­காப்புச் செய­லா­ள­ராக நிய­மித்­தி­ருந்தார்.

மேலும் மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பி­லேயே தற்­போது பேசப்­ப­டு­கி­றது. அதனால் ஏனைய சிறு சிறு மோச­டிகள் பற்றி எவரும் கதைப்­ப­தில்லை. பேக்­கரி உணவுப் பொருட்­க­ளுக்குப் பயன்­படும் கோதுமைத் தானிய இறக்­கு­ம­தியின் போது அதில் பாரிய மோசடி இடம்­பெ­று­கி­றது.

அக்­கோ­து­மைத்­தா­னி­யத்தின் இறக்­கு­ம­தியில் ஒரு கிலோ கிரா­முக்கு ஒன்­பது ரூபா வரி விலக்குச் செய்­யப்­பட்­டுள்­ளது. வாழ்க்கைச் செலவு தொடர்­பான அமைச்­ச­ரவை உப குழு­வி­னா­லேயே அவ்­வரி விலக்குச் செய்­யப்­பட்­டுள்­ளது. வருடம் ஒன்­றுக்கு இரண்டு பில்­லியன் கிலோ­கிராம் கோது­மைத்­தா­னியம் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கி­றது. ஆகவே வருடம் ஒன்­றுக்கு 18 பில்­லியன் ரூபா நிதி மிச்­சப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

எனவே அவ்­வாறு வரி விலக்குச் செய்­யப்­ப­டு­மாக இருந்தால் பாண் உட்பட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும். ஆனால் விலை குறைக்கப்படவில்லை. ஆகவே வரி விலக்கு மூலம் மிச்சப்படுத்தப்படும் குறித்த நிதி எங்கு செல்கிறது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...