கோத்தபாய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது!

June 13, 2018 11:58 AM

10 0

அமெரிக்க குடியுரிமை கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வென்னப்புவ - லுணுவில பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த போது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அமெரிக்க பிரஜை ஒருவருக்கு இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.

அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய விண்ணப்பத்துள்ளதாக அறிய முடிகிறது. ஆனால், அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் மட்டுமே குடியுரிமையை கைவிட முடியும்.

குடியுரிமையை இரத்துச் செய்தால், அவர்கள் சான்றிதழ் ஒன்றை வழங்குவார்கள். அதன் பின்னர் உயர் நீதிமன்றத்திற்கு சென்று அதனை உறுதிப்படுத்திய பின்னரே தேர்தலில் போட்டியிட முடியும்.

உதய கம்மன்பில் இது குறித்து ஒவ்வொரு கதைகளை கூறுகிறார். ஆனால், எங்களுக்கு சட்டம் தெரியும்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...