காதலைச் சேர்த்துவைக்கும் நண்பர்கள் கூட்டம்..!!

June 11, 2018 6:39 AM

9 0

சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணி வெற்றிகரமாகத் தங்களது புதிய படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது.

வெற்றிகரமான நடிகர் மற்றும் இயக்குநராக வலம்வரும் சமுத்திரக்கனிக்கு இந்தப் பாதை ஆரம்பத்தில் அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை. உன்னைச் சரணடைந்தேன் படத்தின் மூலம் 2003ஆம் ஆண்டு திரையுலகில் இயக்குநராக அறிமுகமான சமுத்திரக்கனி தொடர்ந்து நிறைஞ்ச மனசு படத்தை இயக்கினார். இந்தப் படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தராத நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தினார்.

2003ஆம் ஆண்டு சசிகுமார் இயக்குநராக அறிமுகமான சுப்பிரமணியபுரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனித்து அறியப்பட்டார். அந்த வெற்றியளித்த ஊக்கத்தைக் கொண்டு நாடோடிகள் படத்தை நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கினார். சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து நடிகர், இயக்குநர் என இரு துறைகளிலும் வெற்றிகரமாகப் பயணித்துவருகிறார். சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணி அதன் பின்னர் மீண்டும் அமைந்திருந்தாலும் நாடோடிகள் இரண்டாம் பாகத்தில் இணைகிறார்கள் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தது.

ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. மதுரை, தேனி பகுதிகளில் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கிய படக்குழு நேற்று (ஜூன் 8) முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளது.

சசிகுமார், அஞ்சலி, அதுல்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரணி, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தன், துளசி, ஸ்ரீரஞ்சனி, ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சமுத்திரகனியும் நடித்துள்ளார். இறுதிக்கட்டப் பணிகளில் தற்போது கவனம் செலுத்தும் படக்குழு விரைவில் டீசர், ட்ரெய்லர் வெளியீட்டு அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...