காதலர்களை ஈர்க்கும் யுவன் பாடல்..!!! (வீடியோ)

June 13, 2018 3:15 AM

10 0

ரைஸா, ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்துள்ள பியார் பிரேமா காதல் படத்தின் புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ‘ஹை ஆன் லவ்’ என்ற பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது. சித் ஸ்ரீராம் பாடிய அந்தப் பாடலை நிரஞ்சன் பாரதி எழுதியிருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரையும் கவர்ந்த அந்தப் பாடல் யூடியூப்பில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் ‘டோப் டிராக்’ என்ற பெயரில் தற்போது வெளியாகியுள்ள ‘காற்றே உன் காலடியை நான் தேடி…’ பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜாவே பாடியுள்ளார். கோபம் கொண்ட காதலியைக் காதலன் சமாதானப்படுத்தும் விதமாகப் பாடல் அமைந்துள்ளது.

என்ற இந்தப் பாடலும் யூடியூப்பில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாகப் படம் வெளியீட்டுக்கு முன் வெளியாகும் பாடல்களில் இசையமைப்பாளர் மற்றும் அவரது குழுவினர் பாடல்களை உருவாக்கும் முறையும், வரிகளும் மட்டுமே காட்சிகளாக இடம்பெறும். ஆனால், இந்த இரு பாடல்களிலும் கதாநாயகன், கதாநாயகி தோன்றும் காட்சிகளும் சேர்த்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இளன் இயக்கும் இந்தப் படத்தை யுவன் தனது ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...