காணாமற்போனோரின் உறவுகள் நாளை ஜனாதிபதியுடன் கொழும்பில் சந்திப்பு

November 15, 2017 9:46 AM

16 0

காணாமற்போனோரின் உறவுகள் நாளை ஜனாதிபதியுடன் கொழும்பில் சந்திப்பு

தமிழர் தாயகத்தல் காணாமற்போனவர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நாளை வியாழக்கிழமை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதியைச் சந்தித்து, தமது பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவற்கான திகதியொன்றை ஒதுக்கித் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் அடிப்படையிலேயே ஜனாதிபதி செயலகத்தில் நாளை இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, ஜனாதிபதி தமக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது எனக் கிளிநொச்சி மாவட்டக் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்கச் செயலாளர் ஆ.லீலாவதி தெரிவித்தார். ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த 31 பிரதிநிதிகள் இன்று கொழும்புக்குப் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...