கோடியுடன் சிக்கிய மட்டக்குளி பெண்

October 13, 2017 8:50 AM

4 0

கோடியுடன் சிக்கிய மட்டக்குளி பெண்

சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத் தாள்களை, இலங்கைக்கு கொண்டு வர முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தமது பிரயாணப் பொதியில் வெளிநாட்டு நாணயத் தாள்களை சூட்சுமமான முறையில் மறைத்து வைத்துக் கொண்டு வர முற்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன குறிப்பிட்டார்.

கைப்பறப்பட்டுள்ள நாணயத் தாள்களின் இலங்கை பெறுமதி ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா எனவும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய குறித்த பெண் சென்னையிலிருந்து யு.எல் 126 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பணத்தொகை அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...