கூட்டு எதிர்க்கட்சியின் டீல்காரர்கள் பேச்சுவார்த்தைகளை குழப்பினர்: மஹிந்த அமரவீர

December 2, 2017 3:35 AM

4 0

கூட்டு எதிர்க்கட்சியின் டீல்காரர்கள் பேச்சுவார்த்தைகளை குழப்பியதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் டீல் வைத்திருக்கும் சில கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழப்பி விட்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்வதே அவர்களின் நோக்கமாக அமைந்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் சிலர் வளைந்து கொடுக்காது பேச்சுவார்த்தைகளை குழப்பியதனால், சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

ஆளும் கட்சியில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்திய கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் யார் என்பதனை ஒட்டுமொத்த நாடே அறியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...