காசிமேட்டில் கடத்த முயன்ற 300 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்..!!

November 8, 2018 8:05 PM

16 0

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதாக ராயபுரம் உதவி கமி‌ஷனர் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவுப்படி காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் நேற்று இரவு அதிரடி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அட்டை பெட்டிகளுடன் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டவுடன் பெட்டிகளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

அட்டை பெட்டிகளை சோதனை செய்த போது அதில் 300 நட்சத்திர ஆமைகள் இருந்தன. மேலும் அதில் மலேசிய முகவரி ஒட்டப்பட்டு இருந்தது.

கடல் வழியாக நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்த மர்ம கும்பல் அதனை சென்னையில் இருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு கடத்த இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

நட்சத்திர ஆமைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...