கூகுளில் வேலை…மகிழ்ச்சியின் உச்சத்தில் இளைஞன்! சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?..!!

July 13, 2018 12:00 AM

13 0

கூகுளில் பணிபுரிவதற்காக மும்பையை சேர்ந்த ஆதித்யா பல்லிவால் என்ற இளைஞர் ரூ.1.2 கோடி வருட சம்பளத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

கூகுளின் மிக முக்கியமான Artificial Intelligence எனும் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்காக பெங்களூரில் நடத்தப்பட்ட தேர்வில் உலகம் பல்வேறு இடங்களை சேர்ந்த சுமார் 6000 பேர் கலந்துகொண்டனர், இதிலிருந்து 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெங்களூரை சேர்ந்த ஆதித்யா பல்லிவால் என்பவரும் ஒருவர், 22 வயதான ஆதித்யாவுக்கு மாத சம்பளம் ரூ.10 லட்சமாகும்.

கூகுளில் தனக்கு வேலை கிடைத்தது மகிழ்ச்சி என்றும், கல்லூரி ஆசிரியர்கள் அதிகம் உதவி செய்ததாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஆதித்யா.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...