கழிவு நீர் தொட்டியில் 9 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு..!!

April 16, 2018 12:05 PM

7 0

அரியானா மாநிலம் ரோத்தக் மாவட்டத்தில் உள்ள திடாலி கிராமத்தில் கழிவுநீர் தொட்டியில் இறந்து போன உடல் ஒன்று கிடந்துள்ளது. அதனை கண்ட கிரமாத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, இன்று சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில், 9 வயது மதிக்கத்தக்க சிறுமியை மர்மநபர்கள் சாக்குப்பையில் போட்டு கழிவுநீர் கிடங்கில் விசியிருப்பது தெரியவந்தது.

சிறுமியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான காரணம் தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

9 வயது சிறுமியின் உடல் சாக்கு பையில் கட்டிப்போட்டு தூக்கி வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...