களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி

February 10, 2018 9:27 PM

5 0

இன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முதலாவது பெறுபேறு தற்போது வெளியாகியுள்ளது.

களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் 5168 வாக்குகள் மொத்தமாக அளிக்கப்பட்ட நிலையில் 41 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

06 கட்சிகளின் போட்டிக்கு மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டு சின்னத்திற்கு 2781 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டு உறுப்பினர்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 1003 வாக்குகளையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 763 வாக்குகளையும், தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு 198 வாக்குகளையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 214 வாக்குகளையும் சுயேட்சைக் குழு 1158 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...