கல்வி அமைச்சின் செயலாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை

June 14, 2018 7:40 AM

14 0

கல்வி அமைச்சின் செயலாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை

மட்டக்களப்பு கருவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரிக்கு மிக விரைவில் அதிபரொருவரை நியமிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் என்.விஸ்னுகாந்தன் மற்றும் அப்பாடசாலையின் பெற்றோர்கள் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை திருகோணமலையிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சந்திந்து கலந்துரையாடிய போதே கல்வி அமைச்சின் செயலாளருக்கு இப்பணிப்புரையை விடுத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வயலத்திற்கு உட்பட்ட இப்பாடசாலையில் 359 மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் 37 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்தர வகுப்புக்கள் இருந்த போதிலும் இப்பாடசாலைக்கு ஒன்பது மாத காலமாக அதிபரொருவர் இல்லாமையினால் பாடசாலையின் நிர்வாக சீர்கேடுகள் நிலவுவதாகவும் பெற்றோர்கள் ஆளுநரிடம் குறைபாடுகளை முன்வைத்தனர்.

இதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம மிக விரைவில் அதிபரை நியமிக்குமாறு கல்விச்செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...