கல்குடாவில் முச்சக்கரவண்டி தீயில் எரிந்து முற்றாக சேதம்

October 8, 2017 5:32 AM

10 0

கல்குடாவில் முச்சக்கரவண்டி தீயில் எரிந்து முற்றாக சேதம்

மட்டக்களப்பு, கல்குடா - பட்டியடிச்சேனையில் முச்சக்கரவண்டியொன்று தீயில் எரிந்து முற்றாக சேதமாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று அதிகாலையளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுடன், க.சந்திரமோகன் என்பவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு தீயில் கருகியுள்ளது.

வீட்டில் உள்ள அனைவரும் நேற்று நித்திரையில் இருந்துள்ள நிலையில் வித்தியாசமான கருகிய மணம் வருவதை உணர்ந்து உடனே வெளியில் வந்து பார்க்கும்போது முச்சக்கர வண்டி எரிவதை அவதானித்துள்ளனர்.

அருகில் உள்ளவர்களின் உதவியுடன் தீயை அணைப்பதற்கு முயற்சித்தும் முச்சக்கர வண்டி எரிந்து நாசமாகியுள்ளது. இந்த தீயினால் வீட்டின் சிறு பகுதியும் எரிந்துள்ளது.

மேற்படி விடயம் தொடர்பாக கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...