கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவி ஏற்றார் எடியூரப்பா..!! (வீடியோ & படங்கள்)

May 17, 2018 6:31 AM

12 0

கர்நாடகாவின் 23வது முதல்வராக லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா பதவி ஏற்றார். லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவின் 23வது முதல்ராக இன்னும் சற்றுநேரத்தில் பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் அவர் பதவியேற்றார்.

பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு செல்லும் முன்பு , வழியில் பெங்களூர் ராதாகிருஷ்ணன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். உற்சாக கொண்டாட்டம் எடியூரப்பா பதவியேற்பு விழாவை முன்னிட்டு அவர் செல்லும் வழி மற்றும் ஆளுநர் மாளிகை முன்பு பாஜகவினர் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்துனர்.

எடியூராப்பா கர்நாடகா முதல்வராக பதவியேற்றதை அவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரகசிய காப்பு பிரமாணம் தேசிய கீதத்துடன் தொடங்கிய பதவியேற்பு விழாவில் ஆளுநர் வஜூபாய் வாலா எடியூரப்பாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

கடவுள் மற்றும் விவசாயிகள் பெயரில் பச்சை சால்வை அணிந்து கடவுள் மற்றும் விவசாயிகள் பெயரில் பதவி பிரமாணம் செய்துகொண்டார் எடியூரப்பா. எடியூரப்பாவுடன அமைச்சர்கள் 5 பேர் பதவியேற்பார்கள் என கூறப்பட்ட நிலையில் எடியூரப்பா மட்டுமே என்று முதல்வராக பதவியேற்றார். பலத்த பாதுகாப்பு எடியூரப்பா பதவியேற்பு விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு கர்நாடக போலீசாருக்கு இன்று விடுப்பு மறுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...