கணவன், காதலனுடன் ஒரே வீட்டில் வாழும் பெண்: வெளிப்படையாக உலகிற்கு கூறிய உண்மை..!!

April 15, 2018 12:00 AM

10 0

இங்கிலாந்தை சேர்ந்த 44 வயதான பெண்மணி ஒருவர், ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் உறவில் இருக்கும் வாழ்க்கை (polyamory) தனக்கு பிடித்திருப்பதால் கணவர் மற்றம் காதலனோடு வாழும் வாழ்க்கை நன்றாக இருக்கிறது என கூறியுள்ளார்.

மான்செஸ்டர் நகரில் வசித்து வரும் Mary Crumpton- க்கு 40 வயதாகிறது. இவர் தனது வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

Mary கூறியதாவது, எனது கணவர் டிம்(53), காதலர் ஜான்(53) மற்றும் இரண்டு நண்பர்கள் மிச்செல், ஜேம்ஸ் ஆகியோர் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள்.

நான் ஒரு பாரம்பரியமான வீட்டில் வளர்ந்தாலும் எனக்கு அதிகமான ஆண் நண்பர்கள் இருந்தார்கள். எனக்கு 29 வயதின் போது polyamory உறவுமுறையில் நாட்டம் அதிகரித்தது. டிம்மை திருமணம் செய்துகொண்ட பின்னர் எனக்கு வாழ்க்கை புதிதாக இருந்தது.

நாம் எதற்காக, ஒரே நபருடன் வாழவேண்டும், நமக்கு பிடித்தமானவர்களுடன் சேர்ந்து வாழலாம் என்ற ஆசை வந்தது. அப்போது தான் நான் ஜானை சந்தித்தேன், எனது கணவரும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

ஒரே வீட்டில் காதலன் மற்றும் கணவரோடு வாழ்ந்து வருகிறேன். ஆனால், நான் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் ஒருபோதும் தலையிடுவதில்லை. எந்த ஒரு முடிவையும் சுயமாகவே சிந்தித்து செயல்படுவேன்.

ஒரே வீட்டில் இருந்தாலும், இருவரும் என் மீது அதிக அன்பு செலுத்துகிறார்கள் மற்றும் எனது இரண்டு நண்பர்களின் வீட்டிற்கு அவ்வப்போது செல்வேன்.

மற்றவர்களின் பார்வைக்கு இது தவறாக இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை அன்பு மட்டுமே இதில் உள்ளது. எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...