கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டு பிரஜை கைது

July 9, 2018 8:31 AM

7 0

50 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்த 45 வயதான வெளிநாட்டு பிரஜை இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான பாகிஸ்தான் பிரஜை, பாகிஸ்தான் - லாகூரில் இருந்து வந்த விமானத்தில் இன்று காலை 7.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

இதேவேளை சந்தேகநபர் தனது பயணப்பொதியில் 4.180 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பாக்கிஸ்தான் பிரஜையிடம் பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ மெதவத்தவின் ஆலோசனைக்கு அமைய, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ரி.சீ.ஏ.தனபாலவின் கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...