கடந்த பத்துத் தினங்களாகக் காணாமற் போயிருந்த நபர் அடிகாயங்களுடன் மீட்பு..!!

June 11, 2018 5:04 PM

7 0

கடந்த பத்துத் தினங்களாகக் காணாமற் போயிருந்த யாழ். உடுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடிகாயங்களுடன் நேற்று(10) மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இளைஞன் கடந்த- 29 ஆம் திகதி இரவு மோட்டார்ச் சைக்கிளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதன் பின்னர் குறித்த இளைஞனைக் காணவில்லை எனத் தெரிவித்துப் பெற்றோர் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்நிலையில் குறித்த இளைஞனின் இரண்டு கைகளும் கட்டப்பட்டு வாயில் பிளாஸ்ரிக் ஒட்டப்பட்ட நிலையில் அடிகாயங்களுடன் வல்வை வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டு மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வல்வெட்டித் துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, யாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோவில் வீதியைச் சேர்ந்த எ. ஜீவசங்கரி(வயது- 26) என்ற இளைஞனே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...