கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: சந்தேகநபர் பிணையில் விடுதலை..!!

July 14, 2018 12:37 AM

12 0

நுவரெலியா- பொல்பிட்டிய மாதென்ன பகுதியில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்திவந்த சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 18 ஆம் திகதி அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஹற்றன் மது வரித் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டபோது, குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதுடன் அதனை நடாத்தி வந்த சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.

மேலும் சுற்றிவளைப்பின் போது கசிப்பு இஸ்பிரிட் 16000 மில்லி லீற்றர் மற்றும் அதனை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்திய கசிப்பு வகை 185000 மில்லி லீற்றரும் கைப்பற்றப்பட்டதுடன் அதனை தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக ஹற்றன் மது வரித் திணைக்கள அத்தியட்சர் டி.எம்.திலகரத்ண தெரிவித்தார்.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கசிப்பு வடிக்கும் இடங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திருந்தால் அவ்விடயம் தொடர்பாக ஹற்றன் மது வரி திணைக்களத்திற்கு அறியத் தாருங்களென ஹற்றன் மது வரித் திணைக்கள அத்தியட்சர் டி.எம்.திலகரத்ண மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...