ஒரு வயது மகனுக்கு ரூ.1.30 கோடி காரை பரிசளித்த சயிப் அலிகான்..!!

November 15, 2017 2:05 PM

10 0

பிரபல இந்தி நடிகர் சயிப் அலிகான்- நடிகை கரீனா கபூர் தம்பதியின் மகன் தைமூர் அலிகான். வரும் டிசம்பர் 20-ந்தேதி தைமூருக்கு 1 வயது ஆகிறது.இதை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், தனது 1 வயது மகனுக்கு பிறந்த நாள் பரிசு கொடுப்பதற்காக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எஸ்.ஆர்.டி. கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.

இந்த காரில் குழந்தைக்கு என்று தனிசீட் இருக்கிறது. அந்த சீட்டில் மகன் தைமூரை உட்கார வைத்து கார் ஓட்டுவேன்’ என்று சயீப் அலிகான் தெரிவித்துள்ளார். ஒரு வயது குழந்தைக்கு பரிசு வழங்க இவ்வளவு விலை உயர்ந்த காரை சயீப் அலிகான் வாங்கி இருப்பது இந்தி பட உலகை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...