ஒகி புயலால் சீற்றம் கொண்ட அரபிக் கடல்; உயர்ந்த பலி எண்ணிக்கை; 218 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

December 2, 2017 1:45 AM

6 0

ஒகி புயலால் சீற்றம் கொண்ட அரபிக் கடல்; உயர்ந்த பலி எண்ணிக்கை; 218 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

திருவனந்தபுரம்: ஒகி புயல் பாதிப்பில் சிக்கித் தவித்த மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த ஒகி புயல் காரணமாக, குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து அரபிக்கடல் நோக்கி ஒகி புயல் நகர்ந்து சென்றது.

இதன் காரணமாக கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், பத்தனம்திட்டை மற்றும் ஆலப்புழை மாவட்டங்களிலும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருக்கிறது.

கேரளாவில் ஏற்பட்டுள்ள பலத்த சேதத்தை அடுத்து, மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கேரளாவில் புயல் காற்றுடன் பெய்த மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே கேரளாவில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமானார்கள் என செய்திகள் வெளியானது.

இதனைத்தொடர்ந்து கடற்படையின் கப்பல்கள், விமானப்படையின் 4 விமானங்கள் மீட்பு பணிக்காக உடனடியாக அனுப்பப்பட்டன. இதில் 218 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...