ஐ.எஸ்.ஐ. அமைப்பிற்கு ராணுவ ரகசியங்களை அனுப்பிய இந்திய விமானப்படை அதிகாரி கைது..!!

February 9, 2018 12:05 PM

4 0

இந்திய விமானப்படையைச் சேர்ந்த கேப்டன் அருண் மர்வாஹா, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்பிற்கு உளவாளியாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. விமானப்படை தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் அந்த அமைப்புக்கு அனுப்பியுள்ளார்.

ஐ.எஸ்.ஐ. அமைப்பானது பெண் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு மூலம் அருணிடம் தொடர்பு கொண்டுள்ளது. சில வாரங்கள் பேசிய பின் அருண் ராணுவ தகவல்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி அருண் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் உளவாளி என்ற சந்தேகத்தில், அவரிடம் இந்திய விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்களை திடுடியதை அருண் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, விமானப்படை அதிகாரிகள் அருண் மர்வாஹாவை நேற்று டெல்லி சிறப்புப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அருண் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...