ஐரோப்பாவில் பதுங்கியுள்ள பல குற்றவாளிகள்!! சிக்கலில் இலங்கை அரசியல்வாதிகள்

July 14, 2018 2:49 AM

10 0

ஐரோப்பிய நாடான இத்தாலியில், இலங்கை அரசாங்கத்தினால் தேடப்படும் போதைப்பொருள் வர்த்தகர்கள் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இத்தாலியின் பிரபல 4 நகரங்களில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையுடன் தொடர்பு வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

மிலானோ, நாபோலி மற்றும் வெரோனா நகரங்களில் இலங்கையின் பொருள் வர்த்தகர்கள் சாதாரனமாக இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபர்கள் அரசியல்வாதிகளின் உதவியுடனே இத்தாலிக்கு சென்றுள்ளதாகவும், மேலும் சிலர் அரசியல்வாதிகளுடன் இத்தாலிக்கு சென்று அந்த நகரங்களில் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

இத்தாலியில் விற்பனையாகும் லத்தின் அமெரிக்க அட்டைகளை பயன்படுத்தி இவர்கள் இலங்கையில் உள்ள தங்கள் உதவியாளர்களை தொடர்பு கொள்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுவிட்ஸர்லாந்தில் தங்கியிருந்த இலங்கை போதை பொருள் வர்த்தகர்களை சுவிஸ் பொலிஸார் கண்கானிக்க ஆரம்பித்தவுடன் அவர்கள் இத்தாலிக்கு சென்றுள்ளனர்.

சுவிஸ் எல்லையில் பாதுகாப்பு கூடங்கள் நீக்கப்பட்டமையினால் அவர்கள் இலகுவாக இத்தாலிக்கு செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இவ்வாறு இத்தாலிக்கு சென்று போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் சிலர் களுத்துறை மற்றும் களுவாமோதரை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...