ஏம்மா அப்படி என்னதான் இருக்கு அதுல? வாட்ஸ்அப்பே கதி என்று இருந்த மணமகள், என்ன ஆச்சு பாருங்க மக்களே..!!

September 9, 2018 7:17 AM

7 0

உத்தரப்பிரதேசத்தில் எந்நமும் வாட்ஸ்அப்பே கதி என்று இருந்த மணமகளால் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசம் மாநிலம், அம்ரோகா மாவட்டத்தில் உள்ள நவுகன் சதட் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் மெகந்தி. இவரது மகளுக்கும், கமார் ஹைதர் என்பவரது மகனுக்கும் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

திருமணம் நடைபெறும் தினத்தன்று மணப்பந்தலில் அமர்ந்திருந்தார் பெண். ஆனால் மணமகன் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை.

மணப்பெண் வாட்ஸ் அப்க்கு அடிமை ஆனது போல் இருந்ததால் நாங்கள் திருமணத்தை நிறுத்திவிட்டோம் என தெரிவித்தனர். இதனால் கல்யாண கனவுகள் நொருங்க வேதனையில் மூழ்கினர் மணமகள் வீட்டார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...