ஊவா முதலமைச்சருக்கு எதிராக முறைப்பாடு! ஞானாநந்த தேரர் அறிவிப்பு

February 5, 2018 7:47 PM

7 0

ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஞானாநந்த தேரர் அறிவித்துள்ளார்.

வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்காக ஊவா மாகாண சபை அலுவலகத்துக்கு சென்றிருந்த தென்னே ஞானாநந்த தேரர் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியிருந்தார்.

இதன் காரணமாக கோபமுற்ற ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க குறித்த தேரரை நெருங்கி வந்த வேளையில் பொலிஸார் ஞானாநந்த தேரரை பலவந்தமாக அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியிருந்தனர்.

எனினும் முதலமைச்சர் தன்னை தாக்க முற்பட்டதாகவும், அதற்கு எதிராக நாளை செவ்வாய்க்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தென்னே ஞானாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தென்னே ஞானாநந்த தேரர் ஐக்கிய தேசியக் கட்சியின் கையாள் என்பதுடன் சிறுபான்மை விரோதப் போக்குக் கொண்ட பேரினவாத சிந்தனையாளர் என்று பதுளை சிறுபான்மை வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...