ஊடகங்களால் எனக்கு அநீதி ஏற்பட்டது: ரவி கருணாநாயக்க

June 11, 2018 7:15 AM

8 0

ஊடகங்களால் தனக்கு அநீதி ஏற்பட்டதாகவும் வேறு எவருக்கும் அப்படியான அநீதியை ஏற்படுத்த இடமளிக்க போவதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஊடகங்கள் எனக்கு அநீதியை செய்துள்ளன. அதனை மக்கள் அறிந்துள்ளனர். இதனால், வேறு எவருக்கும் அப்படியான அநீதி ஏற்பட இடமளிக்க மாட்டேன்.

ஊடகங்களுக்கும் ஒரு நெறிமுறை இருக்க வேண்டும். என்னுடைய பிரச்சினையை பக்கத்து வீட்டில் கேட்டு பயனில்லை. ஒழுக்க நெறியுடன் பேச வேண்டும். மற்றவர்களின் பிரச்சினைகளை பற்றி என்னிடம் கேட்க வேண்டாம் எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...