உ.பி.: பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 2 பேர் பலி, 34 பேர் காயம்.!!!

November 24, 2017 3:05 AM

5 0

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹர்டோய் பகுதியில் ஒரு தனியார் பேருந்து 34 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது தீடிரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சரமாரியாக ஓடியது.

அந்த பேருந்து பாலத்தில் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் காயமடைந்தனர். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் இரண்டு பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...