உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2018

February 10, 2018 11:24 AM

4 0

2018ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவு பெற்றது.

அதன்படி , வாக்குகளை எண்ணும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை , வாக்குப்பதிவு இடம்பெற்ற மத்திய நிலையங்களிலேயே வாக்குகள் எண்ணும் பணிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 50 சதவீத வாக்குகளும் , ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தில் 70 சதவீத வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சியில் 69 சதவீத வாக்குகளும், வவுனியா மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 70 சதவீத வாக்குகளும் பதுளை மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 75 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர கண்டி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 65-70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

​மேலும் , கம்பஹா மாவட்டத்தில் 73 சத வீத வாக்குகளும் , களுத்துறை மாவட்டத்தில் 70 சத வீத வாக்குகளும் , மாத்தறை மாவட்டத்தில் 64 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ள நிலையில் , ஹம்பாந்தோட்டையில் 65 சத வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை , இரத்தினபுரி மாவட்டத்தில் 75-80 % வாக்குகள் பதிவாகியுள்ளதுடன் , மொனராகலை மாவட்டத்தில் 75 % வாக்குகளும் பதிவாகியுள்ளன.

பொலன்னறுவை மாவட்டத்தில் 68 சத வீத வாக்குகளும் , புத்தளம் மாவட்டத்தில் 70 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

கேகாலை மாவட்டத்தில் 69 சத வீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் , கம்பஹா மாவட்டத்தில் 73 சதவீத வாக்குகளும் , களுத்துறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் 70 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று மதியம் மூன்று மணி வரை 47 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...