உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமானது…!!

February 10, 2018 3:17 AM

4 0

நாடு பூராகவும் உள்ள 340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 8325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமானது.

வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 04.00 மணிக்கு நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

13374 வாக்களிப்பு நிலையங்கள் இதற்கென தயார் செய்யப்பட்டுள்ளன. வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளோரின் எண்ணிக்கை 1கோடியே 57 இலட்சத்து 60ஆயிரத்து 50 பேர் ஆகும்.

வாக்களிப்பு நிறைவடைந்ததும் தபால் வாக்குகள் மற்றும் வாக்களிப்பு முடிவுகளை எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

ஒரு வாக்களிப்பு நிலையத்தைக் கொண்ட தேர்தல் பிரிவுகளின் தேர்தல் முடிவுகள் அந்த இடத்திலேயே எண்ணப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...