உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு சற்று முன்னர் ஆரம்பம்!

February 10, 2018 3:00 AM

11 0

நாடெங்கிலுமுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு சற்று முன்னர் ஆரம்பமானது.

இன்று மாலை 4.00 மணி வரையில் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கலையிலேயே சென்று வாக்குகளை அளிக்குமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் கோரியுள்ளன.

நாட்டின் 340 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 57219 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

43 அரசியல் கட்சிகளும், 222 சுயாதீன குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 15760867 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர்.

24 மாநகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 276 பிரதேச சபைகளுக்காக 8346 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

இதேவேளை, தேர்தல் முறைகேடுகள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் 62 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...