உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழா.. இன்று துவங்குகிறது.. 300 கோடி மக்கள் காத்திருக்கின்றனர்..!!

June 14, 2018 9:22 AM

7 0

உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று துவங்குகின்றன. ஒரு மாதம் நடக்கும் இந்தத் திருவிழாவில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த உலகக் கோப்பையை உலகெங்கும் 300 கோடி மக்கள் பார்த்து ரசிக்க உள்ளனர்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் இன்று துவங்குகிறது. 32 நாடுகள், 32 நாட்கள், 64 ஆட்டங்கள் என, உலகக் கோப்பை களைக் கட்ட உள்ளது.

ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், அந்தப் பிரிவில் உள்ள மற்ற அனைத்து அணிகளுடன் விளையாடும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் என, 16 அணிகள் அடுத்தக்கட்ட நாக் அவுட் சுற்றில் விளையாடும். அதில் வெற்றி பெறும் 8 அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.

லீக் சுற்று ஆட்டங்கள் ஜூன் 14-ம் தேதி முதல் ஜூன் 28 வரையில் நடக்கிறது. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் ஜூன் 30ல் துவங்குகிறது. கால் இறுதி ஆட்டங்கள் ஜூலை 6, 7-ம் தேதிகளிலும் அரை இறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11-ம் தேதிகளிலும் நடைபெறுகின்றன. பைனல் ஜூலை 15ம் தேதி நடைபெறுகிறது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...