உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாக கூறி பெற்றோரிடம் ஒப்படைத்த மருத்துவமனை..!!

December 1, 2017 8:05 PM

5 0

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரவீன் என்பவரின் மனைவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று இரட்டை குழந்தை பிறந்தது. அதில் ஒரு குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்றொரு குழந்தைக்கு சிகிச்சைக்கை அளிக்கப்பட்டு வந்தது. சிறிது நேரத்தில் அந்த குழந்தையும் இறந்து விட்டதாக கூறினர்.

குழந்தைகளின் உடல்கள் பெற்றொரிடம் ஒப்படைக்கப்பட்டன. குழந்தைகளின் உடல்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திடீரென ஒரு குழந்தை உயிர் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்களால் இறந்துவிட்டதாக கூறப்பட்ட குழந்தைக்கு உயிர் வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து அம்மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது தெரியவில்லை. அது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. குழந்தையின் பெற்றொர்களுக்கு எங்களால் முடிந்த ஆதரவு அளித்து வருகிறோம் என தெரிவித்தனர். போலீசார் மருத்துவமனை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து மத்தியசுகாதரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா சுகாதாரத்துறை செயலாளரை தொடர்பு கொண்டு பேசினார்.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...