உதயங்கவை இலங்கைக்கு அழைத்துவர அதிகாரிகள் விரைவில் துபாய் பயணம்

February 5, 2018 12:36 PM

8 0

துபாயில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்துவர அதிகாரிகள் விரைவில் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார்கள் என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கையின் இராஜதந்திரிகளும், வெளிவிவகார அமைச்சினரும், துபாய் அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

செல்லுபடியற்ற இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பயணித்தபோதே உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மிக் (விமான கொள்வனவு) விசாரணைக்கு உட்படுபவர் என அமைச்சர் சாகல ரத்நாயக்க தமது டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

வகை பக்கம்

Loading...