உண்மை, நீதி, நட்­ட­ஈடு குறித்த ஐ.நா. விசேட நிபுணர் நாளை வரு­கிறார்..!!

October 9, 2017 5:45 AM

5 0

ஐக்­கிய நாடு­களின் உண்மை, நீதி, நட்­ட­ஈடு மற்றும் மீள் நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்தல் போன்­றவை தொடர்­பான விசேட நிபுணர் பப்­புலோ டி கிரீப் உத்­தி­யோ­க ­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு நாளை இலங்கை வரு­கிறார்.

இம்­மாதம் 23 ஆம்­தி­கதி வரை இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும் ஐ.நா.வின் விசேட பிர­தி­நிதி பப்­புலோ டி கிரீப் இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை மதிப்­பீடு செய்­ய­வி­ருக்­கின்றார்.

அரச உயர் அதி­கா­ரிகள், மாகாண மட்ட அரச அதி­கா­ரிகள், மக்கள் பிர­தி­நி­திகள், நீதித்­துறை உறுப்­பி­னர்கள், இரா­ணுவ தலைமை அதி­கா­ரிகள், சட்­டத்தை அமு­லாக்கும் நிறு­வ­னங்­களின் பிர­தா­னிகள், மதத்­த­லை­வர்கள், அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள், மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் பிர­தி­நி­திகள், சிவில் சமூக பிர­தி­நி­திகள், பாதிக்­கப்­பட்ட மக்கள், கல்­வி­யா­ளர்கள், சர்­வ­தேச சமூ­கத்தின் பிர­தி­நி­திகள், உள்­ளிட்­ட­ ப­ல­ரையும் ஐ.நா.வின் விசேட நிபுணர் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வி­ருக்­கின்றார்.

இந்த விஜ­யத்­தின்­போது ஐ.நா. விசேட பிர­தி­நிதி பப்­புலோ டி கிரீப் கொழும்பில் பல்­வேறு சந்­திப்­புக்­களை நடத்­த­வுள்­ள­துடன் தெற்­கிற்கும் மத்­திய மாகா­ணத்­திற்கும் வடக்கு, கிழக்­கிற்கும் விஜயம் செய்­ய­வுள்ளார்.

ஐக்­கிய நாடு­களின் உண்மை, நீதி, நட்­ட­ஈடு மற்றும் மீள் நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்தல் போன்­றவை தொடர்­பான விசேட நிபுணர் பப்­புலோ டி கிரீப்பின் இலங்கை விஜயம் தொடர்பான இறுதி அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 38 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...