உடல் உறுப்பு தான பதிவுக்கு ‘மொபைல் ஆப்’ அறிமுகம்

November 24, 2017 7:04 AM

6 0

உடல் உறுப்பு தான பதிவுக்கு ‘மொபைல் ஆப்’ அறிமுகம்

சென்னை: உடல் உறுப்பு தானம் செய்வதற்கான, புதிய, ‘மொபைல் ஆப்’ இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில், உடல் உறுப்பு தான இயக்கம், 2008ல் துவக்கப்பட்டது. இதுவரை, 5,940 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்; 1,058 பேர் உடல் உறுப்புகள் தானம் தர, பதிவு செய்துள்ளனர். தேசிய அளவில், உடல் உறுப்புகள் தானம் தருவதில், தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.இந்நிலையில், உடல் உறுப்புகள் தானம் செய்ய விரும்புவோர், பதிவு செய்வதற்கு, புதிய மொபைல் ஆப், இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உடல் உறுப்பு தேவைப்படுவோரும், பதிவு செய்வதற்காக, www.transtan.org புதிய இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவற்றை, முதல்வர் பழனிசாமி இன்று, அறிமுகம் செய்கிறார்.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...