உடனடியாக ஒரு இலட்சம் மெட்ரிக்டொன் அரிசியை இறக்குமதி செய்யுமாறு பிரதமர் உத்தரவு

December 8, 2017 5:08 AM

7 0

உடனடியாக ஒரு இலட்சம் மெட்ரிக்டொன் அரிசியை இறக்குமதி செய்யுமாறு பிரதமர் உத்தரவு

சந்தையில் அரிசிக்கு எந்தவித தட்டுப்பாடும் இருக்க கூடாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய உடனடியாக ஒரு இலட்சம் மெட்ரிக்டொன் அரிசியை இறக்குமதி செய்யுமாறும் பிரதமர் உத்தரவு பிறப்பித்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ன குறிப்பிட்டார்.

பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்தைக்குப்பின்னரே பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்றும் இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ன தெரிவித்தார்.

சந்தையில் அரிசியின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ன அரிசியை பதுக்கி வைத்து தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என்றும் வர்த்தகர்களிடம் கேட்டுக்கொண்டார். இவ்வாறு செயல்படவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ன மேலும் கூறினார்.

ஆதாரம்: kathiravan.com

வகை பக்கம்

Loading...