ஈராக்- சிரியா எல்லைப்பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் ஆவேச தாக்குதல் – 54 பேர் பலி..!!!

July 13, 2018 6:00 PM

9 0

சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமும் உள்நாட்டு போராளிகளுக்கு உதவுவதாக களம் இறங்கியது. ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை அழிப்பதாக கூறி அமெரிக்கக்கூட்டு படைகளும் ஈராக்கில் நுழைந்து போர் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ஈராக் சிரியா எல்லைப்பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலர் பதுங்கி இருக்கின்றனர். இவர்கள் மீது போர் விமானங்கள் மூலம் அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 28 பொதுமக்கள் உட்பட 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியா போரை கண்காணித்து வரும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த தாக்குதல் குறித்து இதுவரை அமெரிக்கப்படை தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.

ஆதாரம்: athirady.com

வகை பக்கம்

Loading...